TA/750601 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் ஹானலுலு இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஒரு கற்றறிந்த அறிஞராகாமல் யாரும் ஒரு ப்ராஹ்மணனாக முடியாது... நாங்களும் எங்கள் மாணவர்களுக்கு ப்ராஹ்மண நிலையை கொடுக்கிறோம், ஆனால் அவன் ஒன்றாம் நம்பர் முட்டாளாக இருந்தால், பிறகு நாம் முயற்சியை தவறாக பயன்படுத்துகிறோம். அவன் மிக கற்றறிந்த அறிஞராக இருக்க வேண்டும். அதுதான் இலக்காக இருக்க வேண்டும். மேலும் அவன் கற்றறிந்த அறிஞராக எவ்விதமான சிரமமும் இல்லை, ஏனென்றால் எங்களிடம் பல புத்தகங்கள் இருக்கிறது. நீங்கள் வெறுமனே படித்து நாங்கள் பேசுவதை புரிந்துக் கொள்ளுங்கள். நாங்கள் புத்தகத்தை விற்பதற்காக மட்டும் அல்ல. நாம் படிக்கவும் வேண்டும். பிறகு ப்ராஹ்மண என்ற நம் நிலை நிறைவேறும். ஏனென்றால் ப்ராஹ்மண ஆசிரியர்கள். கற்பிக்க முடிந்த யாராயினும், அவர் ப்ராஹ்மண. எனவே நீங்கள் முற்றிலும் படித்தாலே தவிர, நீங்கள் இந்த உலகத்திற்கு என்ன பேசப்போகிறீர்கள், நீங்கள் எவ்வாறு ப்ராஹ்மண மற்றும் பண்டிதவாக முடியும்? நீங்கள் இதை கவனமாக கவனிக்கவும்."
750601 - சொற்பொழிவு SB 03.28.01 - ஹானலுலு