TA/750531 காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் ஹானலுலு இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"கோலோக-நத(?). ஒருவர் கிருஷ்ணரின் திருவடிகளில், பரமபதத்தை அடைய முயற்சி செய்துக் கொண்டிருக்கிறார். ஒரு சிறிய முரண்பாடு... மஹாராஜ பாரத? ஆம், அவர் ஒரு மானாக ஆனார். ஆகையினால் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதுதான் அறிவுரை. மஹாராஜ பாரத கூட, தாழ்வை அடைந்தார். ஆகையினால் நாம் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும். இவைதான் நாம் கவனமாக இருக்க கொடுக்கபட்ட அறிவுரைகள். கீர்தனீய꞉ ஸதா ஹரி꞉ (CC Adi 17.31), எப்போதும் ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா, என்று உச்சாடனம் செய்யுங்கள். அது உங்களை காப்பாற்றும். அந்த கிருஷ்ண ஜெபித்தலும் மேலும் கேட்பதும், அது நம்மை பாதுகாக்கும். உதாரணம் கொடுக்கப்பட்டுள்ளது, எவ்வாறு என்றால் ஒரு மாசுபட்ட பெண் அனைத்து வீட்டு வேலைகளை செய்கிறாள், ஆனால் அவள் தன் கள்ளக் காதலரை இரவில் எப்பொழுது சந்திக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாள். இது உதாராணம். அதேபோல், நாம் வேறுபட்ட பௌதிக செயல்களில் ஈடுபட்டிருக்கலாம், ஆனால் நம் நம்பிக்கையை கிருஷ்ணர் மேல் வைத்திருந்தால், பிறகு அது நம்மை காப்பாற்றும்."
750531 - காலை உலா - ஹானலுலு