TA/750529 காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் ஹானலுலு இல் வழங்கிய அமிர்தத் துளி
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "பிரபுபாதர்: மயாத்யக்ஷேண ப்ரக்ருʼதி꞉ (BG 9.10). அவர்கள் இந்த இயற்கையை கவனிக்கிறார்கள், மிகவும் சக்தி வாய்ந்தது, ஆனால் சக்தி வாய்ந்த இயற்கை கிருஷ்ணரின் உத்தரவுபடி இயங்குகிறது. மயாத்யக்ஷேண. அது தெரிவிக்கப்படுகிறது, ஆனால் அவர்களுடை மிக மோசமான மூளையால், அவர்களால் அதை புரிந்துக் கொள்ள முடியவில்லை. மூடா.
நம் நிலை இந்த நுரைகள் போலத்தான். ஒரு சிறிய அலையால், மில்லியன் கணக்கில் நுரைகள் வெளியே வருகிறது, மேலும் மறுபடியும் அனைத்தும் முடிந்துவிடும். நம் நிலையும் அப்படிதான். எனவே நம் நிலையும் நுரையை போலத்தான்; நாம் சமுத்திரத்தின் மதிப்பீடு எடுக்கிறோம். இதுதான் நம் நிலை. நம் நிலை நுரையின் ஒரு துளி போன்றது, மேலும் நாம் சமுத்திரத்தின் வலிமையை கணக்கிடுகிறோம். மற்றும் உங்களால் கணக்கிடமுடியவில்லை என்றால், அது விபத்து. அவ்வளவுதான். வேலை முடிந்தது. அது விபத்து. செய்யப்படும் அனைத்தும் விபத்து. நமக்கு கணக்கிட முடியவில்லை என்பதை நாம் ஒப்புக்கொள்ள மாட்டோம். விபத்து, அவ்வளவுதான். நீக்கப்படும். பலி-மர்தன: அவர்கள் விபத்து என்று சொல்லும் போது, அது வெறுமனே அவர்களுக்கு தெரியவில்லை என்று அர்த்தம். பிரபுபாதர்: ஆம், அதுதான் அர்த்தம்." |
| 750529 - காலை உலா - ஹானலுலு |