TA/750527 காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் ஹானலுலு இல் வழங்கிய அமிர்தத் துளி
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "பரபுபாதர்: டார்வினிசத்தால் அவர்கள் விலங்ககுகளாக குறைக்கப்பட்டனர், குரங்குகளை விடசிறப்பாக இல்லை.
பரபுபாதர்: ஆம், அது குரங்குகளுக்கானது, புத்திசாலியான உயர்குடிமகனுக்கு அல்ல. புத்திசாலியான உயர்குடிமகன் நினைப்பான் அதாவது "நான் இப்போது... பரிணாமத்தால் நான் இந்த நிலைக்கு வந்துவிட்டேன், மனிதனாக. அடுத்தது என்ன?" மேலும் அது புத்திசாலிதனம். குருக்ருʼபா: அது ஒரு நல்ல வாக்குவாதம். பரபுபாதர்: அவன் நினைப்பான், "அடுத்தது என்ன? அது இங்கேயே முடிந்துவிடுமா?" அந்த போக்கிரி சொல்கிறான், "இல்லை, முடிந்த பிறகு, அனைத்தும் முடிந்துவிடும்." இது என்ன? அங்கே பரிணாமம் இருந்தால்—நீங்கள் இந்த நிலைக்கு வரவேண்டும்—பிறகு, அடுத்த நிலை என்ன? அது இயற்கையே. அதன் பதில் பகவத் கீதையில் இருக்கிறது யாந்தி தேவ-வ்ரதா தேவான் (BG 9.25). இப்போது நீங்கள் முயற்சி செய்தால் சந்திர கிரகத்திற்கு செல்லலாம். சந்திர கிரகம், சூரிய கிரகம், வீனஸ் மற்றும் பற்பல, தீவிரமாக இருந்தால் நீங்கள் செல்லலாம். மேலும் நீங்கள் பகவானின் கிரகத்திற்கு செல்லலாம். மத்-யாஜினோ (அ)பி யாந்தி மாம். இப்போது நீங்கள் எங்கே போகப் போகிறீர்கள் என்று தேர்ந்தெடுங்கள். ஆனால் அங்கே எதிர்காலம் இருக்கிறது. ஆனால் அவர்களுடைய கோட்பாடு என்ன? அதாவது இந்த உடல் முடிந்துவிட்டால், அனைத்தும் முடிந்துவிடும். அவர்களுக்கு மறுபிறவியில் நம்பிக்கை இல்லை. பலி-மர்தன: ஆகையினால் அவர்களுடய வாழ்க்கை நம்பிக்கையற்றதாக இருக்கும். பரபுபாதர்: நம்பிக்கையற்றது, ஆம்." |
| 750527 - காலை உலா - ஹானலுலு |