TA/750525c சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் ஹானலுலு இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே கிருஷ்ணர் கூறினார், "அவன்தான் யோகிகளில் சிறந்தவன்." யோகினாம் அபி ஸர்வேஷாம்ʼ. ஸர்வேஷம் என்றால் "அனைத்திலும்." அனைத்து வகையான யோகிகளிலும், என்னைப் பற்றி எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கும் யோகிதான் சிறந்தவன்."

அதுதான் கிருஷ்ணரின் தத்துவம். பகவத் கீதையில் அவர் கற்பித்துக் கொண்டிருக்கிறார், மன்-மனா பவ மத்-பக்தோ மத்-யாஜீ மாம்ʼ நமஸ்குரு (BG 18.65). நான்கு விஷயங்கள். நீங்கள் இந்த நான்கு விஷயங்களை உண்மையாக செய்தால்— எபோதும் கிருஷ்ணரை பற்றி நினைத்துக் கொண்டிருந்தால், மன்-மனா; சும்மா அவருடைய பக்தனாக ஆனால், மன்-மனா பவ மத்-பக்தோ; மத்-யாஜீ, கிருஷ்ணரை வணங்குகள்... நாங்கள் கோவிலில் அறைகளில் செய்வது போல். நீங்கள் ஒரு பக்தனாக இருந்தால் நீங்கள் எங்கும் கிருஷ்ணரை வணங்கலாம். ஒரு பக்தன் கிருஷ்ணரை எங்கும் வணங்கலாம், மரத்தடியில், ஏனென்றால் கிருஷ்ணர் எல்லோருடைய இதயத்திலும் இருக்கிறார், ஈஶ்வர꞉ ஸர்வ-பூதானாம்ʼ ஹ்ருʼத்-தேஶே (அ)ர்ஜுன திஷ்டதி (BG 18.61). எனவே மரத்தடியில் நீங்கள் கிருஷ்ணரை நினைத்து மேலும் ஹரே கிருஷ்ணா ஜெபித்தால் அது போதுமானது. கிருஷ்ணருக்கு ஒரு பெரிய சாதனங்கள் தேவை இல்லை. அவருக்கு வேண்டியது நீங்கள் எவ்வளவு நேர்மையாக இருக்கிறீர்கள் என்பதுதான். அவ்வளவுதான்."

750525 - சொற்பொழிவு - ஹானலுலு