TA/750525b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் பிஜி தீவுகள் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நிவ்ருʼத்தி-மார்க என்றால் பௌதிக முறை வாழ்க்கையை நிறுத்திவிடுங்கள்; ஆன்மீக வழியான வாழ்க்கையை ஆரம்பித்து, மேலும் பரமபதம் அடைய, கிருஷ்ணா, இறைவனடி சென்று அடையுங்கள். த்யக்த்வா தேஹம்ʼ புனர் ஜன்ம நைதி (BG 4.9). நீங்கள் ஆன்மீக வாழ்க்கையை வளர்த்துக் கொண்டால், பிறகு, இந்த உடலைவிட்டு போகும் போது... நாம் விட்டுவிட வேண்டும். இது பௌதிக உடல். மேலும் இந்த உடலை விட்டு போன பிறகு, நாம் மீண்டும் ஏற்றுக்கொள்ளலாம்... நம் ஆன்மீக உடலை தொடரலாம் அல்லது மீண்டும் பௌதிக உடலை ஏற்றுக் கொள்ளலாம். எவ்வாறு வளர்த்துக் கொள்ளவது என்பதற்கு நம் புலன்கள் தேவைப்படுகிறது. எனவே நாம் ஆன்மீக வாழ்க்கையை சில சதவீதம் வளர்த்துக் கொண்டால்—எல்லோராலும் இயலாது— குறைந்த பட்சம் உயர்ந்த நிலையில் இருப்பவர், சமூகத்தின் உயர்ந்த பிரிவில் இருப்பவர், அவர்கள் ஆன்மீக வாழ்க்கையை வளர்த்து, மேலும் சிறந்தவர்களாக இருந்தால் பிறகு மற்றவர்களும் பின்பற்றுவார்கள். இதுதான் எங்கள் பிரச்சாரம்."

750525 - Interview - பிஜி தீவுகள்