TA/750524 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் பிஜி தீவுகள் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"தஸ்யாஹம்ʼ நிக்ரஹம்ʼ மன்யே வாயோர் இவ ஸுதுஷ்கரம். இந்த யோகிகள், பொதுவாக, யோகிகள், அவர்கள் மனதை பூரண பரம உண்மையில் கவனம் செலுத்த முயற்சி செய்கிறார்கள். அதுதான் யோகியின் பயிற்சி. யோக இந்த்ரிய-ஸம்ʼயம꞉. யோகா என்றால் மனதை பூரண பரம உண்மை மேல் கவனம் செலுத்த தன் புலன்களை கட்டுப்படுத்துவது. ஏனென்றால் புலன்கள் மிகவும் அமைதியற்று இருக்கும் அது உங்கள் மனதை ஒரு நிலைப்படுத்தவிடாது. ஆகையினால் யோக இந்த்ரிய-ஸம்ʼயம꞉. அதுதான் யோகா.

எனவே இங்கே அதே யோகாவிற்கு ஆலோசனை கூறப்படுகிறது: யோகம்ʼ யுஞ்ஜன் மத்-ஆஶ்ரய꞉ இந்த யோகா கிருஷ்ணரின் கீழ் பயிற்சி செய்யப்பட வேண்டும். மத் என்றால் "நான்," மேலும் ஆஶ்ரய என்றால் புகலிடம் பெறுவது. அல்லது மத்-ஆஶ்ரய꞉ என்றால் கிருஷ்ண பக்தரின் பாதுகாப்பை பெறுவது; கிருஷ்ணரின் பாதுகாப்பை முழுமையாக பெற்ற ஒருவர், அவருடைய பாதுகாப்பை பெறுவது."

750524 - சொற்பொழிவு BG 07.01 - பிஜி தீவுகள்