TA/750523 காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் மெல்போர்ன் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நீங்கள் ஆலோசனை மட்டும்தான் கொடுக்கலாம், "ஹரே கிருஷ்ணா உச்சாடனம் செய்யுங்கள். பிறகு அனைத்தும் சரியாகிவிடும்," இந்த ஒரு மருந்து. நீங்கள் வெறுமனெ அவர்கள் எவ்வாறு உச்சாடனம் செய்து பிரசாதம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஏற்பாடு செய்யலாம். பிறகு அனைத்தும் சரியாகிவிடும். இது எளிமையான முறை. அவர்களை அழைத்து வாருங்கள்: "தயவுசெய்து இங்கே வாருங்கள், உச்சாடனம் செய்யுங்கள், நடனம் ஆடுங்கள் மேலும் பிரசாதம் எடுத்துக் கொள்ளுங்கள்." அவர்கள் அனைவரும் நல்லவர்களாவார்கள். இந்த செயல்முறையால். இல்லையென்றால், நீங்கள் அவர்களுக்கு நல்ல ஆலோசனை கொடுத்தால், அவர்களால் செயல்படுத்த முடியாமல் போய்விடும். அவர்கள் மிகவும் பாவிகள்ள். அவர்களுக்கு சிகிச்சை, ஒரே சிகிச்சை இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் தான். எப்படியோ ஒரு விதமாக, அவர்களை ஒன்றாக அழைத்து வாருங்கள். அவர்களை உச்சாடனம் செய்யவிடுங்கள். அவர்களை நடனம் ஆடவிட்டு மேலும் பிரசாதம் எடுத்துக் கொள்ள செய்யுங்கள். அவர்கள் சரியாக வந்துவிடுவார்கள்."
750523 - காலை உலா - மெல்போர்ன்