TA/750522d காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் மெல்போர்ன் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"கலஸம்வர: பௌதிக உலகம் இல்லாத நேரம் என்று ஒன்று இருந்ததா?

பிரபுபாதர்: இல்லை, இல்லை. பௌதிக உலகம் ஆற்றலில் எப்போதும் அங்கிருந்தது. ஆனால் அதற்கு ஒரு விரிவாக்கம் ஆரம்பித்தும், மேலும் மறுபடியும் முடிவடைந்துவிடும். அது பகவானிடமிருந்து ஆரம்பித்து. மேலும் மறுபடியும் அது இறைவனிடம் முடிவடைந்துவிடும். ஆனால் பகவான் நித்தியமானவர். (இடைவேளை) ... உங்களுடைய உணர்வு, அது வெளிப்படுத்தப்பட்டது, மேலும் சில நேரங்களில் அது வெளிப்படுத்தப்படவில்லை. ஆனால் ஆற்றல் உணர்வு அங்கிருக்கிறது. எவ்வாறு என்றால் நான் சில நேரங்களில் கோபம் அடைகிறேன், சில நேரங்களில் கோபம் இல்லை, ஆனால் கோபம் கொள்ளும் ஆற்றல் அங்கிருக்கிறது. அது நித்தியமானது. அதேபோல், பௌதிக உலகம், பௌதிக சக்தி, அல்லது பௌதிக இயற்கை, நிரந்தரமானது, ஆனால் அது சில நேரங்களில் விரிவாக்கம் பெறுகிறது சில நேரங்களில் இல்லை. இப்போது அது விரிவாக்கம் பெற்றுள்ளது. அது முடிவடைந்துவிடும். மீண்டும், மற்றொறு உடல் வெளிப்படும், மேலும் முடிவடைந்துவிடும். ஆனால் நான் நித்தியமானவன்."

750522 - காலை உலா - மெல்போர்ன்