TA/750522c சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மெல்போர்ன் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ந தே விது꞉ ஸ்வார்த-கதிம். எல்லோரும் சுயநலவாதிகளாக இருக்கிறார்கள். எல்லோரும் சுயநலவாதிகளாக அவர்களுடைய சொந்த தேவைகளை கவனிக்கிறார்கள். அது நல்லது, மிகவும் நல்லது. ஆனால் உங்கள் தன்நலம் எது என்று உங்களுக்கு தெரியுமா? அது அவர்களுக்கு தெரியாது. யாரோ நினைத்துக் கொண்டிருக்கிறார், "என் தன்நலத் தேவை இது"; யாரோ நினைத்துக் கொண்டிருக்கிறார், "என் தன்நலத் தேவை இது," ஆகையினால் மேலும் அங்கே மோதல், சச்சரவு, சண்டை ஏற்படுகிறது. ஆனால் உண்மையில், தன்நலம் என்பது ஒன்று தான், குறைந்தபட்சம் மனிதர்களுக்கு. அது என்ன? பகவனை பற்றி உணர்தல். அது இந்தியர்களுக்கும் சமமாக முக்கியமானது; சமமாக அனைத்து உயிர் வாழிகளுக்கும் முக்கியமானது; முக்கியமாக நாகரீகமான மனிதர்களுக்கு. இதுதான் தன்நலத் தேவை. அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா. அது என்ன பூரண உண்மை? ஜீவஸ்ய தத்த்வ-ஜிஜ்ஞாஸா (SB 1.2.10). அதுதான் நம்முடைய முதன்மையான வேலையாக இருக்க வேண்டும். நிச்சயமாக, நாமக்கு தங்க ஒரு இடமும் உணவுக்கு தேவையான பொருள்களும் மேலும் பாலியல் ஏற்பாடுகள் அல்லது பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவை. அதுதான் தேவை. நீங்கள் அதைச் செய்யுங்கள். ஆனால் உங்கள் முக்கியமான வேலையை மறந்துவிடாதீர்கள். பிறகு பூனைகள் மேலும் நாய்களுமாவீர்கள். உங்கள் முக்கியமான வேலை பகவானை உணர்தல்."
750522 - சொற்பொழிவு SB 06.01.01-2 - மெல்போர்ன்