TA/750522b உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் மெல்போர்ன் இல் வழங்கிய அமிர்தத் துளி
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "பிரபுபாதர்: இப்போது உங்களுக்கு ஐக்கிய நாடு இருக்கிறது. இப்போது, அவர்கள் புத்திசாலி மனிதர்களாக இருந்தால், அவர்கள் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், "இந்த உலகம் முழுவதும் பகவானுக்குச் சொந்தமானது, மேலும் நாம் அனைவரும் பகவானின் மக்கள். எனவே நாம் இப்போது உலகின் ஐக்கிய நாடு என்று உருவாக்குவோம்." அது மிகவும் எளிதாக செயல்படுத்தலாம். அவர்கள் அமெரிக்க ஐக்கிய நாடு என்று உருவாக்கும் போது, ஏன் உலகின் ஐக்கிய நாடு என்று இருக்கக் கூடாது?
வாலி ஸ்ட்ரோபஸ்: நான் நினைக்கிறேன் அது அநேகமாக பல பிரச்சனைகளை தீர்க்கும், ஏனென்றால் உரிமை, உடைமை... பிரபுபாதர்: ஆம் அனைத்து பிரச்சனைகளையும். இப்போது ஒருவேளை இந்தியாவில் உணவுப் பொருட்களின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில், ஆப்ரிக்காவில், ஆஸ்திரேலியாவில் போதுமான தானியங்கள் இருக்கிறது. உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யுங்கள், விநியோகம் செய்யுங்கள். பிறகு உடனடியாக அனைத்து நாடுகளும் ஐக்கியமாகிவிடும். அனைத்தையும் பயன்படுத்துங்கள், கடவுளின் பரிசு—நாம் அனைவரும் மகன்கள்—மிகவும் அழகாக. பிறகு அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும். இப்போது நாம் செய்திருக்கும் சிரமம் என்னவென்றால், "இல்லை, இது என்னுடைய சொத்து. நாங்கள் இதை பயன்படுத்துவோம், எங்கள் தேசமாக." வேத கருத்தில் தேசம் என்று ஒன்றும் இல்லை. அப்படி ஒன்றும் இல்லை." |
| 750522 - உரையாடல் B - மெல்போர்ன் |