TA/750521c காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் மெல்போர்ன் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நீங்கள் ஏன் பார்பதை நம்புகிறீர்கள்? அதுதான் குறைபாடு. அதுதான் மேற்கத்தியர்களின் குறைபாடு. அவர்கள் மிகவும் குறைபாடுகள் நிறைந்தவர்கள்; இருப்பினும் அவர்கள் கூறுகிறார்கள், "என்னால் பார்க்க முடியவில்லை." உங்கள் பார்க்கும் சக்தி என்ன? ஒருவேளை நாரதர் வந்தும், சில தேவர்கள் வந்தும் ஆனால் உங்களால் பார்க்கமுடியவில்லை. எவ்வாறு என்றால் ந்ருʼஸிம்ʼஹ-தேவ தோன்றிய போது ப்ரஹ்லாத பார்த்துக் கொண்டிருந்தார். "உன் பகவான் இங்கிருக்கின்றாரா?" "ஆம்." ஆனால் அவரால் பார்க்கமுடியவில்லை. எனவே நீங்கள் ஏன் உங்கள் பார்வையை நம்புகிறீர்கள்? நீங்கள் பார்க்கும் சக்தியை அடைய வேண்டும். அது சிறந்த உதாரணம், ப்ரஹ்லாத... ஹிரண்யகஶிபு ப்ரஹ்லாதரை கேட்கிறார், "எங்கே உன் பகவான்?" "என் பகவான் எங்கும் இருக்கிறார்." "அவர் இந்த தூணில் இருக்கிறாரா?" "ஆம்." எனவே அவர் பார்த்துக் கொண்டிருக்கிறார், ஆனால் அவரால் பார்க்கமுடியவில்லை. அவர் மிக கோபம் கொண்டு தூணை உடைத்தார்: "உன் பாகவான் எங்கிருக்கிறார் என்று எனக்கு காட்டு" இதுதான் நிலை. எனவே ஒருவர் பொருள்களை பார்க்க கண்களை உருவாக்க வேண்டும். உனக்கு எவ்வகையான கண்கள் இருந்தாலும் நீ அனைத்தையும் பார்க்கலாம் என்று பொருள்படாது. இல்லை. எவ்வாறு என்றால், கார் இயக்கப்படுகிறது, அந்த காரை பார்க்கும் குழந்தை அது தானாக ஓடுகிறது என்று பார்க்கிறது. மேலும் தந்தையும் பார்க்கிறார், "இல்லை, அங்கே ஓட்டுனர் இருக்கிறார்." எனவே குழந்தையின் பார்வையும் மேலும் தந்தையின் பார்வையும் வேறுபட்டது."
750521 - காலை உலா - மெல்போர்ன்