TA/750521b உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் மெல்போர்ன் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பிரபுபாதர்: எனவே தந்தை இளம் பெண்களை மிகுந்த அக்கரையுடன் கவனிக்க வேண்டும். மேலும் தந்தை, பெண்ணுக்கு ஒரு நல்ல பையனை தேடி அவனிடம் பெண்ணை ஒப்படைப்பதில் மிகவும் கவலையுடன் இருக்கிறார். எங்கள் குழந்தைப் பருவத்தில் நாங்கள் பாத்திருக்கிறோம். ஆனால் இந்நாளில் இவை குறைந்துவிட்டது. ஜவஹர்லால் நேரு, எங்கள் முன்னாள் பிரதம மந்திரி, விவாகரத்து சட்டத்தை அறிமுகப்படுத்தினார். இப்போது சமூகம் குழப்பமான நிலையில் இருக்கிறது.

இயக்குனர்: சமூகம் அதை விரும்பினால் நீங்கள் என்ன செய்யமுடியும்?

பிரபுபாதர்: சமூகம்... அது எவ்வாறு என்றால் உங்கள் குழந்தை நரகத்திற்கு செல்ல விரும்புவது போல் ஆகும். ஆனால் அவனை நரகத்திற்கு அனுப்புவது தந்தையின் வேலையாகாது. சமூகம் விரும்புகிறது... ஏனென்றால் சமூகத்திற்கு தெரியாது, அரசாங்கத்திற்கு மனிதர்களின் நிலையை எவ்வாறு உயர்த்துவது என்று தெரியாது. அவர்களுக்கு அது தெரியாது. நாமும் மிருகங்களும் ஒன்று என்று அவர்களுக்கு தெரியும். அவர்கள் வெறுமனே நிர்வாணமாக அலைகிறார்கள், மேலும் நாம் நன்றாக ஆடை அணிந்திருக்கிறோம், அவ்வளவுதான். நாகரீகம் முடிந்துவிட்டது. நான் விலங்காக இருக்கிறேன், ஆனால் என் முன்னேற்றம் எதனால் என்றால், நான் மிக அழகாக ஆடை அணிந்திருக்கிறேன். அதுதான் தற்போதைய தரநிலை. ஆனால் வேத நாகரீகம் அவ்வாறல்ல. விலங்கினம் தங்கள் உணர்வுகளை மாற்றிக் கொள்ள வேண்டும். அவன் ஒரு மனிதனாக பயிற்சி பெற வேண்டும்."

750521 - உரையாடல் - மெல்போர்ன்