TA/750511 - ஶ்ரீல பிரபுபாதர் பெர்த் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"எனவே குரு அங்கிருக்கிறார். அவர்தான் தலைமை மனிதன், வழிகாட்டுகிறார், அல்லது கேப்டன். மேலும் மற்றவர்கள் ஓட்டுகிறார்கள், மேலும் படகு வலிமையானது, மற்றும் காற்று சாதகமாக உள்ளது. இந்த சூழ்நிலையில், உங்களால் தாண்ட முடியவில்லை என்றால், நீங்கள் தற்கொலை செய்ய வேண்டும். ஶாஸ்த்ரஸ் அங்கிருக்கிறது. அதுதான் சாதகமான காற்று. உங்களுக்கு பாதை தெரிகிறது. மேலும் ஆன்மீக குரு வழிகாட்டுகிறார், "இவ்வாறு செய்யுங்கள்." மேலும் உங்களுக்கு ஒரு அழகான படகு இருக்கிறது, மேலும் நீங்கள் ஓட்டுகிறீர்கள். இப்போது கடந்து செல்லுங்கள். பௌதிக உலகில் ஒரு மிகப் பெரிய சமுத்திரம். சும்மா வானத்தை பாருங்கள், அது எவ்வளவு பெரியதாக உள்ளது. ஆக நாம் இந்த பௌதிக வானத்தை கடக்க வேண்டும், அதன் மூடியை ஊடுருவு, பிறகு ஆன்மீக வானத்திற்கு செல்லவும். நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள். பரஸ் தஸ்மாத் து பாவ꞉ அன்ய꞉ (அ)வ்யக்தோ (அ)வ்யக்தாத் ஸனாதன꞉ (BG 8.20). அந்த இடம், இந்த பௌதிக உலகின் முழுமையும் அழிவுற்றாலும், அது பாதுகாப்பாக இருக்கும். எனவே நாம் படகை ஓட்டி அங்கே செல்ல வேண்டும்.
ஆகையினால் பகவத் கீதையில் கிருஷ்ணர் கூறுகிறார், "போக்கிரிகளே, அனைத்தையும் விட்டுவிடுங்கள். என்னிடம் சரணடையுங்கள். மேலும் என்னிடம் சரணடையுங்கள். நான் கொடுத்திருக்கும் அறிவுறைகளை அப்படியே பின்பற்றுங்கள். பிறகு நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள்." " |
750511 - காலை உலா - பெர்த் |