TA/750510b - ஶ்ரீல பிரபுபாதர் பெர்த் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"ஒரு மனிதன், குறைந்தபட்சம் ஒரு வகை மனிதர்கள் அங்கே இருக்க வேண்டும், ப்ராஹ்மண, ப்ராஹ்ம ஜானாதி இதி ப்ராஹ்மண꞉, காரியங்கள் எவ்வாறு நடந்துக் கொண்டிருக்கிறது என்று அறிந்தவர்கள். நமக்கு அது தெரியும். நாங்கள் கிருஷ்ண பக்தி மக்கள், எங்களுக்கு தெரியும். ஆகையினால் நாங்கள் நாகரீகமானவார்கள்.
கணேஶ: ஆனால் பகவத் கீதை, அது ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது, எனவே அது இன்றைக்கு தொடர்புடையதல்ல. பிரபுபாதர்: இல்லை, அது எழுதப்படவில்லை. அது அங்கே இருந்தது. அவ்வாறென்றால் நீ பகவத் கீதை படிப்பதில்லை. நீ ஏன் அவ்வாறு பேசுகிறாய்? உனக்கு பகவத் கீதை தெரியுமா? நீ பகவத் கீதை படிக்கவிலை. இது உனக்கு ஒரு அவமானமாகும். நீ பகவத் கீதை படித்திருக்கிறாயா? கணேஶ: கொஞ்சம். பிரபுபாதர்: என்ன அது? அமோக: அவர் சொல்கிறார் ஆம், கொஞ்சம். பிரபுபாதர்: அப்படியென்றால் உனக்கு தெரியாது. அவர் ஏன் பகவத் கீதை, ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது என்று கூறினார்? நீ ஏன் அவ்வாறு சொன்னாய்? உனக்கு தெரியாது. அது முதலில் நாற்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பேசப்பட்டது. இமம்ʼ விவஸ்வதே யோகம்ʼ ப்ரோக்தவான் அஹம் . . . (BG 4.1). நீ பகவத் கீதை படிப்பதில் எம்மாதிரியான வாசகர், உனக்கு தெரியாது?"
|
750510 - காலை உலா - பெர்த் |